IBC Tamil Online Radio

எங்கள் இணையதளங்கள்

எங்கள் தொகுப்பாளர்கள்

தொகுப்பாளர்களை தேர்வு செய்து அவர்களுது நிகழ்ச்சிகளை கேளுங்கள்.

Gowri

Pavithra

Sutharshan

MP Arokiyanathan

SK Rajen

shathiesh

Kogulan

Parthi

Inthu

Sam Pratheepan

சமீபத்திய செய்திகள்

ஐபிசி செய்திகள்

பொலிஸ்மா அதிபர் ஒரு பைத்தியக்காரர்; பகிரங்கமாக விமர்சித்த பந்துல

Apr 24,2017   11 Views

ஸ்ரீலங்கா பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஒரு பைத்தியக்காரர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன பகிரங்கமாக விமர்சித்துள்ளார். மக்களின் அடிப்படை உரிமையை பறித்தெடுத்த பொலிஸ்மா அதிபரை உடனடியாக வீட்டிற்கு அனுப்பிவைத்து நாட்டிற்கு முன்மாதிரியை காண்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சவால் விடுத்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான காமினி லொக்குகேவின் கொழும்பு - கெஸ்பேவ பகுதியில் உள்ள இல்லத்தில் நேற்றைய தினம் விசேட கூட்டமொன்று இடம்பெற்றது. இதன்போது உயைாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, “யாராலுமே அவிழ்க்க முடியாத கயிறு ஒன்றை ஜனாதிபதிக்கு யாரோ கொடுத்துள்ளனர். நாட்டின் பொருளாதாரம் இரண்டரை வருடங்களுக்குப் பின்னர் மஹிந்த ராஜபக்சவின் யுகத்திற்குப் பின் சரியான திசைக்கு வந்திருப்பதாக கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ச ஆட்சியை ஒப்படைக்கும்போது அந்நிய செலாவணி 8.2 பில்லியன் டொலர்களாக இருந்தது. இன்று அது 5 பில்லியனாக குறைந்துள்ளது. இது இப்படியிருக்கையில், ஜனாதிபதி பொருளாதாரம் சரியான திசைக்கு வந்திருப்பதாக தெரிவித்திருக்கின்றார். மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் ஒரு டொலரின் பெறுமதி 131 ரூபாவாக இருந்தது. இன்று டொலர் ஒன்றிற்கு 156 ரூபாவை செலுத்த வேண்டும். இதுவா சரியான திசை? ஸ்ரீலங்காவின் வரலாற்றில் அதிகமான நாணயத் தாள்களை வெளியிட்ட ஒரேயோரு அரசாங்கமாக இந்த அரசாங்கம் சாதனை படைத்துள்ளது. 2016ஆம் ஆண்டில் 856 பில்லியன் ரூபாய்கள் வெளியிடப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களில் பிரதானிகளை வெசாக் தினத்திற்கு முன்னதாக மாற்றுவதாக ஜனாதிபதி கூறியிருக்கின்றார். அப்படியென்றால் முதலாவதாக சட்டத்தை வளைத்தெடுக்கும் பொலிஸ்மா அதிபரை வீட்டிற்கு அனுப்பி நாட்டிற்கு முன்மாதிரியை காண்பிக்கும்படி ஜனாதிபதிக்கு சவால் விடுக்கின்றேன். இந்த பொலிஸ்மா அதிபர் ஒரு பைத்தியக்காரர். சட்டத்தை வளைத்து, அச்சுறுத்தி, மீதொட்டமுல்லையில்கூட பொலிஸாரை அனுப்பிவைத்து தாக்கியிருக்கிறார்கள். கரதியானயில் வீட்டிலிருந்து மக்கள் வெளியேறாதபடி செய்து அடிப்படை உரிமை அறிவு கூட தெரியாத பொலிஸ்மா அதிபர் அரசியல் யாப்பை மீறிவிட்டார்” – என்றார்.

ரணதுங்க குடும்பத்தின் ஒத்துழைப்பின்றி மஹிந்தவால் அரசியலில் ஈடுபட இயலாது

Apr 24,2017   17 Views

ரணதுங்க குடும்பத்தின் ஒத்துழைப்பின்றி மஹிந்த ராஜபக்சவால் அரசியலில் ஈடுபட இயலாது என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். ரணதுங்க குடும்ப உறுப்பினரின்றி கம்பஹா மாவட்டத்தில் தன்னால் அரசியலில் ஈடுப்பட இயலாதென்பதை மஹிந்த ராஜபக்ச நன்கறிந்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் தந்தையார் ரெஜி ரணதுங்கவின் 80 ஆவது ஜனனதின நிகழ்வு உடுகம்பல பொது மயானத்தில் அமையப்பெற்றுள்ள ரெஜி ரணதுங்கவின் நினைவிடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்கவின் அழைப்பை ஏற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ரெஜி ரணதுங்கவின் ஜனன தின நிகழ்வில் கலந்துகொள்வாரா என அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர், என்னுடைய தகப்பனார் இறக்கும் பொழுது நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்தார். அக்காலத்தில் மஹிந்த ராஜபக்ச என்னுடை தந்தைக்கு அமைச்சு பதவியை வழங்கவில்லை. அவர் நாடாளுமன்றில் என்னுடன் இறுதி வரிசையிலேயே அமர்ந்திருந்தார். இவ்வாறான கண்டுகொள்ளப்படாத நிலையிலேயே எனது தந்தை இறந்தார். மஹிந்த ராஜபக்ச ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து வந்தவர்களிற்கு அமைச்சு பதவிகளை வழங்கினார். அதனை தவிர்த்து மஹிந்த ராஜபக்ச என்னுடைய தந்தையை எவ்வாறு பார்த்துக்கொண்டாரென நான் அறியேன். எது எவ்வாறாயினும் இன்று ரெஜி ரணதுங்கவின் அருமையை மஹிந்த ராஜபக்ச தெரிந்துக் கொண்டதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்” என்றும் குறிப்பட்டார். இன்று ரணதுங்க குடும்ப உறுப்பினர் தொடர்பில் மஹிந்தவிற்கு அன்பு ஏற்பட்டமை தொடர்பில் ஆச்சரியம் ஏற்படத் தேவையில்லை எனக் குறிப்பிட்ட அவர், தான் கட்சி சார் அரசியலில் ஈடுபடும் நபரல்ல என்றும் தெரிவித்துள்ளார். “தந்தையின் பொருட்டு சமய அனுஸ்டானங்களில் ஈடுபடுவதே எம்முடைய எதிர்பார்ப்பாகும். சகோதரர்கள் என்ற வகையில் எம்மிடையே எந்தவித பிரச்சினைகளும் இல்லை. நாம் வேறுப்பட்ட அரசியல் செயன்முறைகளை பின்பற்றுகின்றோம். நாட்டை முன்நிறுத்தி செயற்படும் நபர்களுடன் இணைந்து பணியாற்றவே எப்பொழுதும் விரும்புகின்றேன். என்னுடைய தந்தை கட்சியை பாதுகாத்த வண்ணம் முன்னோக்கிச் சென்றவர். கட்சியை பாதுகாக்கும் பொருட்டே அவர் தன்னுடைய பதவிகளை அர்ப்பணித்தார். அதேபோன்று இன்று ருவன் ரணதுங்க மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதன் மூலமாக கட்சியை பாதுகாக்கின்றார். பிரசன்ன மாறுப்பட்ட அரசியல் முறையை பின்பற்றுகின்றார். அவர் என்ன செய்கின்றார் என்பது பற்றியும் அவருடை அரசியல் செயற்பாடுகள் பற்றியும் அவர் ஓர் நாள் விளங்கிக்கொள்வார்” என்றும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

கட்சி பிரதிநிதிகளின் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதித்தார் பிரதமர்

Apr 24,2017   6 Views

நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரையறை செய்துள்ளார். இதனடிப்படையில், கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் ஒரு வருடத்தில் மூன்று தடவைகளுக்கு மேல் வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபடக் கூடாது என அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், தவிர்க்க முடியாத காரணங்களால் வெளிநாடு செல்ல நேரிட்டால் தன்னிடம் எழுத்து மூலம் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள், கட்சி ஆதரவாளர்களினதும் பொதுமக்களினதும் தேவைகளை இனங்கண்டு நிறைவு செய்பவர்களாக இருக்க வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். சபைகளுக்கு பொறுப்பானவர்கள் மற்றும் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்துக்கு அதில் அங்கம் வகிப்பவர்கள் மூன்று கூட்டங்களுக்கு சமூகமளிக்கா விட்டால், அவர்கள் குறித்த பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் ஆணையகத்துக்கு இலஞ்சம்; தினகரனிடம் இன்றும் விசாரணை

Apr 24,2017   91 Views

இரட்டை இலை சின்னத்தைப் பெற, தேர்தல் ஆணையகத்துக்கு இலஞ்சம் வழங்குவதற்கு பேரம் பேசியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில், தினகரனிடம் இன்று 3 ஆவது நாளாகவும் விசாரணை இடம்பெறவுள்ளது. டெல்லி குற்றப்பிரிவு பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணை 2 நாட்களாக இடம்பெற்ற நிலையில், இன்று 3ஆவது நாளாக முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் சுமார் 10 மணித்தியாலத்துக்கும் மேலாக விசாரணை நீடித்த நிலையில், இந்திய நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களின் முன்னர் டெல்லியில் வைத்து கைதுசெய்யப்பட்ட தரகர் சுகேஷ் சந்திரா வழங்கிய தகவலக்கு அமைய, பொலிசார் தினகரன் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர். அத்துடன் தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரிடம் பொலிசார் விசாரணை நடத்தியதுடன், தினகரனின் கையடக்கத் தொலைபேசி அழைப்புக்களையும் பொலிசார் ஆய்வு செய்தனர். தினகரன், தரகர் சுகேஷ் சந்திரா, நண்பர் மல்லிகார்ஜூனா மற்றும் ஜனார்த்தனன் ஆகிய நால்வரிடமும் தொடர்ந்தும் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. விசாரணையில் அனைத்து கேள்விகளுக்கும் தினகரன் ஒரே வரியில் பதிலளித்து வருவதனால் விசாரணை தொடர்ந்து நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.